கேரளா Air India விபத்துக்கு 16 பேர் பலி

கேரளா Air India விபத்துக்கு 16 பேர் பலி

கேரளாவின் கோழிக்கோடு (Kozhikode/Calicut) விமான நிலையைத்தில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 7:40 மணிக்கு இடம்பெற்ற Air India (Flight IX 1134) விமான விபத்துக்கு விமானிகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியாகியும், 90 பேர் காயமடைந்து உள்ளனர்.

கரோனா காரணமாக முடங்கி இருந்த இந்தியர்களை டுபாயில் இருந்து எடுத்து வந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. மழை காரணமாக விமானம் தரை இறங்கும்போது வழுக்கி விபத்துக்கு உள்ளானது என்று கூறப்படுகிறது. விபத்துக்கு உள்ளான விமானம் 35 அடி பள்ளத்தாக்கு ஒன்றுள் வீழ்ந்து, இரண்டாக உடைந்தும் உள்ளது.

அந்த விமானத்தில் 184 பயணிகளும், 4 பணியாளரும், 2 விமானிகளும் இருந்துள்ளனர். பயணிகளுள் 10 குழந்தைகளும் அடங்குவர். இந்த விமானம் ஒரு Boeing 737-800 NG வகையினதாகும்.

கடும் பருவக்காற்று காரணமாக மேற்படி விமானம் சில நேரம் வானத்தில் சுற்றி இருந்துள்ளது.