சனி, ஞாயிறு பெரிய அளவில் Aurora என்ற துருவ ஒளி

சனி, ஞாயிறு பெரிய அளவில் Aurora என்ற துருவ ஒளி

நாளை சனிக்கிழமையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் பெரிய அளவில் Aurora borealis அல்லது Northern Light என அழைக்கப்படும் துருவ ஒளி தெரியும் என்று அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) கூறியுள்ளது. காலநிலை சாதகமாக இருந்தால் துருவங்களை அண்டிய நாட்டவர் பலரும் இதை காணக்கூடியதாக இருக்கும்.

நேற்று வியாழக்கிழமை பெருமளவு சூரிய கதிர்கள் (solar flare) சூரியனை நீங்கி இருந்தன. அவையே பூமியில் இந்த துருவ ஒளி வீச்சை உருவாக்கும். இந்த துருவ ஒளி வீச்சை அதன் அளவுக்கு ஏற்ப NOAA G1 முதல் G5 வரையான 5 பிரிவுகளுக்கு உட்படுத்தும். G1 அளவு minor ஆகவும், G5 அளவு extreme ஆகவும் இருக்கும். நாளைய வீச்சு G3 அல்லது strong ஆக இருக்கும்.

வட அமெரிக்காவில் Oregon மாநிலத்து Portland நகரம் முதல் நியூ யார்க் நகரம் வரையிலான கோட்டுக்கு வடக்கே உள்ளோரும், ஐரோப்பாவில் நோர்வே, சுவீடன், பின்லாந்து போன்ற இடங்களில் உள்ளோரும் இதை காணக்கூடியதாக இருக்கும்.

சிலவேளைகளில் Carson City, Nevada, Oklahoma, Raleigh, North Carolina போன்ற நகரங்களுக்கு வடக்கே உள்ளோரும் இதை காணக்கூடியதாக இருக்கும். ஐரோப்பாவில் Dublin, Hamburg வரை இது தெரியக்கூடும்.

Aurora Australia என்று அழைக்கப்படும் தென் துருவ ஒளியை Melbourne, Christchurch ஆகிய நகரங்களில் உள்ளோரும் காணக்கூடியதாக இருக்கும்.

சூரியன் ஒளியையும், சக்தியையும் மட்டும் வெளியிடவில்லை. அது கூடவே சிறு துகள்களையும் வெளியிடுகிறது என்கிறது விஞ்ஞானம். சிறிய அளவில் வரும் அந்த துகள்களை நாம் காண்பதில்லை. ஆனால் துகள்களின் தொகை அதிகமாக இருப்பின் அது coronal mass ejection என்று அழைக்கப்படும் solar storm ஆக இருக்கும்.

பூமியை சுற்றி உள்ள magnetic shield என்ற கவசம் இந்த துகள்கள் பூமியை அடைவதை தடுக்கும். ஆனால் சிறு தொகை துகள்கள் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் மூலம் நுழைந்து, அங்குள்ள வாயுக்களுடன் கலந்து அழகிய ஒளி நடனத்தை காண்பிக்கும். Oxygen பச்சை, சிவப்பு நிறங்களையும், Nitrogen நீல மற்றும் purple நிறங்களையும் வழங்கும்.

இது செய்மதி தொடர்புகள், தொலைத்தொடர்புகள், வானொலி சேவைகள் ஆகியற்றையும் தாக்கலாம்.

படம்: NASA