சனி முதல் மீண்டும் Emirates விமான சேவை

Dubai

வரும் சனிக்கிழமை, ஜூன் 20 ஆம் திகதி, முதல் Emirates விமான சேவை கட்டுநாயக்காவில் இருந்து பயணிகளை டுபாய்க்கும், டுபாய் மூலம் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்ல உள்ளது. ஆரம்பத்தில் சனி, ஞாயிரு ஆகிய இரு தினங்களில் மட்டுமே இந்த சேவை இடம்பெறும்.
.
வெள்ளி இரவும், சனி இரவும் டுபாயில் இருந்து பொதிகளை மட்டும் ஏற்றிவரும் விமானம் (flight EK2528) சனி மற்றும் ஞாயிரு அதிகாலை 1:00 மணிக்கு பயணிகளையும், பொதிகளையும் ஏற்றி டுபாய் செல்லும் (EK2529).
.
டுபாய்க்கு செல்லும் பயணிகள் டுபாய்க்கான அனுமதியையும், ஏனையோர் தமது செல்லுமிடங்களுக்கான அனுமதியையும் கொண்டிருக்க வேண்டும்.
.
பயணிகளுக்கான mask, glove, wipes ஆகியவற்றை விமானம் வழங்கும். விமானம் கொண்டுள்ள air filter 99.97% வைரசுகளை நீக்கும் வல்லமை கொண்டுள்ளது என்கிறது விமான சேவை.
.
கொழும்பு நோக்கிய பயணிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பயணிக்கக்கூடியாத இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலைமைக்கு ஏற்ப சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
.