சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை வென்றது PAP

Singapore

இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற தேர்தலில் People’s Action Party மீண்டும் பெரும்பான்மை வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 93 ஆசனங்களில் 83 ஆசனங்களை PAP கட்சி வென்றுள்ளது.
.
ஆனாலும் 1965 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் PAP கட்சி தற்போது மெல்ல ஆதரவை இழந்து வருகிறது. 1968 ஆம் ஆண்டில் இந்த கட்சி 86.7% ஆதரவை பெற்று இருந்தது. 2015 ஆம் ஆண்டில் 69.9% ஆதரவை பெற்று இருந்தது. ஆனால் இம்முறை 61.2% ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது.
.
தற்போதை பிரதமர் Lee Hsien Loong சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் Lee Kuan Yew வின் மகன். தந்தை சுமார் 38 வருடங்கள் ஆட்சி செய்தவர். 1968 ஆம் ஆண்டின் பின் மொத்தம் 6 தடவைகள் ஆட்சியை வென்ற தந்தை, 4 தடவைகள் அனைத்து ஆசனங்களையும் வென்று இருந்தார்.
.
எதிரணியான Workers’s Party 10 ஆசனங்களை வென்றுள்ளது.
.
தென்கொரியா (ஏப்ரல்), Serbia (ஜூன்), சிங்கப்பூர் (ஜூலை) ஆகிய நாடுகள் கரோனா மத்தியிலும்  தேர்தலை நிறைவேற்றி உள்ளன.
.