சிம்பாப்வே முகாபே மரணம்

Zimbabwe

சிம்பாப் நாட்டின் (Zimbabwe) முன்னாள் ஜனாதிபதி முகாபே (Robert Mugabe) இன்று தனது 95 ஆவது வயதில் காலமானார். சுதந்திர போராளியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, பின் சிம்பாப்வேயின் சர்வாதிகாரியாக மாறிய இவர் 2017 ஆம் ஆண்டில், 37 வருட சர்வாதிகார ஆட்சியின் பின், இராணுவ புரட்சி மூலம் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவர் சிங்கப்பூரில் வைத்தியம் பெற்று வந்திருந்தார்.
.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அப்போது ரொடீசியா என்று அழைக்கப்பட்ட சிம்பாப்வேயில் பிறந்த இவர் 1980 ஆம் ஆண்டு, சுதந்திரம் பெற்றபின், இடம்பெற்ற தேர்தலில் பெரும் வெற்றியை அடைந்தார்.
.
பின்வரும் காலங்களில் இவர் அங்கு வாழ்ந்த வெள்ளையரின் சொத்துக்களை பறித்தார். அதனால் மேற்கு நாடுகள் அவர் மீது தடைகளை விதித்தன.
.
வெள்ளையரிடம் இருந்து பறித்த நிலங்களில் பயிரிடும் வல்லமையையும் முகாபே அணி கொண்டிருக்கவில்லை. அங்கு பொருளாதாரம் முற்றாக அழிந்திருந்தது.
.