சீனாவை தடுக்க இந்தியா விரைந்து வெங்காய ஏற்றுமதி

சீனாவை தடுக்க இந்தியா விரைந்து வெங்காய ஏற்றுமதி

கடந்த மாதம் இந்தியாவின் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் பாரிய மழை வீழ்ச்சியை கொண்டிருந்தன. அதனால் அங்கு வெங்காய உற்பத்தி அழிந்து, இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்து இருந்தது.

அதிகரிக்கும் வெங்காய விலையை கட்டுப்படுத்த இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை கடந்த திங்கள்கிழமை தடை செய்திருந்தது. முன்னறிவிப்பு இன்றி இந்தியா செய்த ஏற்றுமதி தடையால் பங்களாதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளில் வெங்காய விலை திடீரென பல மடங்கால் அதிகரித்தது.

பங்களாதேசத்தில் Tk 40.00 (Taka, பங்களாதேச நாணயம்) ஆக இருந்த ஒரு kg வெங்காயம் Tk 300.00 ஆக அதிகரித்து. நிதானம் இல்லாத இந்திய வெங்காய இறக்குமதியால் விசனம் கொண்டது பங்களாதேசம்.

மேற்படி 3 நாடுகளும் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை கொள்வனவு செய்ய முன்வந்தன. அதை இந்தியா விரும்பவில்லை. கடந்த ஆண்டு இந்தியா வெங்காய ஏற்றுமதி தடையை விதித்த காலத்தில் சீனா பெருமளவு வெங்காயத்தை இப்பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

இன்று சனிக்கிழமை இந்தியா தனது தடையை பின்வாங்கி மேற்படி 3 நாடுகளுக்கும் மேலதிக வெங்காயம் ஏற்றுமதி செய்கிறது. பங்களாதேசத்துக்கு மட்டும் 2,500,000 kg வெங்காயத்தை உடனடியாக ஏற்றுமதி செய்கிறது.