சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணை, இந்தியா எதிர்ப்பு

DiamerBashaDam

இந்தியாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் சீனாவின் முதலீட்டுடன் பாகிஸ்தான் இன்று Diamer Bhasha என்ற நீர்மின் அணையை நிர்மாணிக்கும் வேலைகளை ஆரம்பித்து உள்ளது. இந்த நீர்மின் அணைக்கு சுமார் $8 பில்லியன் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
.
இன்றைய ஆரம்ப விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தூதுவர் ஆகியோர் சமூகமாக இருந்தனர்.
.
இந்து நதியின் குறுக்கே அமையவுள்ள இந்த நீர்மின் அணை பாகிஸ்தானின் கட்டுப்பாடில் உள்ள காஸ்மீர் பகுதியில் உள்ளதால் இந்தியா விசனம் கொண்டுள்ளது. முழு காஸ்மீரும் இந்தியாவுக்கு உரியது என்கிறது இந்தியா.
.
மேற்படி அணை மேலைகள் 2028 ஆம் ஆண்டில் நிறைவுபெறும். இந்த நீர்மின் அணை 4,500 megawatts மின்னை உற்பத்தி செய்யும். அணையின் அருகில் நீர் நிரம்பிய காலத்தில் ஆழம் 272 மீட்டர் ஆக இருக்கும்.
.
இந்த திட்டத்தில் சீனாவின் அரச நிறுவனமான China Power 70% பங்கையும், பாகிஸ்தானின் இராணுவத்தின் கட்டுப்பாடில் உள்ள Frontier Works Organization 30% பங்கையும் கொண்டிருக்கும்.
.
பாகிஸ்தானின் கட்டுப்பாடில் உள்ள காஸ்மீரில் மேலும் இரண்டு சிறிய நீர்மின் அணைகளை $4 பில்லியன் செலவில் நிர்மாணிக்க சீனா இணங்கி உள்ளது. அந்த இரண்டு நீர்மின் அணைகளும் சுமார் 1,800 megawatts மின்னை உற்பத்தி செய்யும்.
.