சீன பெற்றார் Stanford அனுமதிக்கு செலுத்திய $6.5 மில்லியன்

YaleStanford

செல்வந்த அமெரிக்கர்கள் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு இலஞ்சம் செலுத்தி தம் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றனர் என்ற உண்மைகள் வெளிவந்த பின், தற்போது வெளிநாட்டு பெற்றாரும் அவ்வாறு பெரும் தொகை பணம் செலுத்தி அனுமதி பெற்று இருந்தமை பகிரங்கத்துக்கு வந்துள்ளது.
.
ஒரு சீன பெற்றார் தமது மகளுக்கு Stanford பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற $6.5 மில்லியன் இலஞ்சம் வழங்கி உள்ளனர் என்று கூறுகிறது தொடரும் விசாரணை. அதன்படி ஒரு பல்கலைக்கழக அனுமதிக்கு வழங்கிய அதிகூடிய இலஞ்சம் இதுவாகவே இருக்கும்.
.
சீன பெற்றார் Rick Singer என்ற அமெரிக்கருக்கு இந்த பணத்தை நன்கொடை என்ற கருத்தில் வழங்கி உள்ளனர். Rick Singer என்பவரே அனைத்து இலஞ்ச குற்றச்சாட்டுகளின் மத்தியில் உள்ளவர்.
.
மேற்படி சீன மாணவியை Stanford கடந்த மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றி உள்ளதாக கூறுகிறது. அந்த மாணவியின் sailing தராதர பாத்திரம் போலியானது என்று அறிந்ததாலேயே அவரை நீக்கியதாக பல்கலைக்கழகம் காரணம் கூறி உள்ளது. அந்த மாணவி பெயரில் பல்கலைக்கழகம் அரை மில்லியன் (500,000) நன்கொடை பெற்றதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
.