சீன வூகான் நகரை முடக்கியது corona வைரஸ்

Coronavirus

அண்மையில் தோன்றிய corona வைரஸ் காரணமாக சீனாவின் வூகான் (WuHan) நகரமே தற்போது முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 11 மில்லியன் மக்களை கொண்ட இந்த சீன நகரத்துக்கும் வெளி இடங்களுக்குமான விமான, ரெயில், மற்றும் பஸ் போக்குவரத்துக்களை சீன அரசு முற்றாக துண்டித்து உள்ளது. Corona வைரஸ் வெளி இடங்களுக்கு பரவுவதை தடுப்பதே அதிகாரிகளின் நோக்கம்.
.
இந்த வைரஸுக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். பலியாகியோர் வயதெல்லை 48 வயது முதல் 89 வயது வரை என்றும் இவர்கள் ஏற்கனவே பலவீனமாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சுமார் 570 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளார். கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி அளவிலேயே இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது.
.
முதலில் இது மிருகங்களில் இருந்து மனிதனுக்கு தொற்றும் நோய் என்று கருதப்பட்டாலும், பின்னர் இது மனிதரில் இருந்து மனிதருக்கு தாவும் இயல்பு கொண்டது என்று கூறப்பட்டது.
.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கும் (Beijing) சில தினங்களில் வரவுள்ள சீன புதுவருட கொண்டாட்டங்களையும் நிறுத்தி உள்ளது.
.
இந்த வைரஸின் பாதிப்பு சீனாவில் ஒரு அவசரகால நிலை என்றாலும், உலக அளவில் இது தற்போது அவசரகால நிலையில் இல்லை என்று World Health Organization கூறி உள்ளது.
.