ஜெர்மனியில் இருந்து வெளியேறும் 9,500 அமெரிக்க படைகள்

US-Germany

ஜெர்மனியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளில் 9,500 படையினர் உடனடியாக வெளியேறுகின்றனர். இந்த திடீர் வெளியேற்றத்துக்கு அமெரிக்க சனாதிபதி ஜெர்மனியின் அதிபர் Angela Merkel மீது கொண்டுள்ள காழ்ப்பே காரணம் என்று கருதப்படுகிறது.
.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் இருந்து, ரஷ்யாவுடனான cold war காலம் ஊடாக பெரும் தொகையான அமெரிக்க படைகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நிலை கொண்டுள்ளன. ஜெர்மனியில் மட்டும் தற்போது 34,500 அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. அதில் 9,500 படையினரை அங்கிருந்து வெளியேற ரம்ப்  வெள்ளிக்கிழமை உத்தரவு இட்டுள்ளார்.
.
வெளியேறும் 9,500 படையினர் மீண்டும் அமெரிக்கா செல்வார்களா, அல்லது போலாந்து போன்ற ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்த்தப்படுவார்களா என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இந்த படையினரில் பலர் தமது குடும்பங்களுடன் அங்கு நிலை கொண்டுள்ளார்.
.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவின் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ரம்ப் G7 மாநாட்டை இந்த மாதம் அமெரிக்காவில் நிகழ்த்த விரும்பினார். ஆனால் Angela Merkel பங்குகொள்ள மறுத்துவிட்டார். அது ரம்ப் G7 மாநாட்டை பின்போட காரணமானது.
.
அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் சிலவும் ஜெர்மனியில் வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள Ramstein விமான படை தளம் மிக முக்கியமானது.
.