ஜெர்மனியில் துப்பாக்கி சூடுகளுக்கு 8 பேர் பலி

Germany

ஜெர்மனியில், Frankfurt நகருக்கு 25 km கிழக்கே உள்ள Hanau என்ற நகரில் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு குறைந்தது 8 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நிலையங்கள் மத்திய கிழக்கு அல்லது தென் ஆசிய வகையிலான shisha bar என்று கூறப்படுகிறது.
.
ஆயுததாரர் முதலாவது shisha நிலையத்தை தாக்கியதில் 3 பேரும், இரண்டாம் நிலையத்தை தாக்கியதில் 5 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாவது தாக்குதல் இடம்பெற்ற நிலையம் Arena Bar & Cafe என்று கூறப்படுகிறது.
.

சந்தேகநபரின் வீட்டை போலீசார் சுற்றிவளைத்த பின் தேடுதல் நடத்தினர். வீட்டின் உள்ளே சந்தேக நபரின் உடலையும், வேறு ஒருவரின் உடலையும் போலீசார் எடுத்து உள்ளனர். சந்தேக நபரின் விபரங்களையோ அல்லது அவரின் நோக்கங்களையோ போலீசார் இதுவரை அறிவிக்கவில்லை.

.