தனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி

Harry

சார்ள்ஸ், டயானா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹரியும் (Prince Harry, வயது 35) அவரின் மனைவி Meghan னும் வடஅமெரிக்கா சென்று தனிக்குடித்தனம் செய்ய முனைகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பால் சினம் கொண்டுள்ளார் இராணி Elizabeth II.
.
ஹரி தம்பதி தாம் சுதந்திரமாக, சுயாதீன பொருளாதாரத்துன் (financially independent) வடஅமெரிக்காவில் வாழ முனைகின்றனர். அதற்கு ஏற்ப இராச குடும்ப கடமைகளில் இருந்து விலகவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இராணி.
.
இன்று வெள்ளிக்கிழமை மகன் சார்ள்ஸ், பேரர்கள் வில்லியம், ஹரி ஆகியோருடன்  இராணி இந்த விசயம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளார். ஹரியின் தீர்மானத்தால் இராச குடும்பம் நொந்துள்ளது (hurt) என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
முன்னாள் நடிகையான ஹரியின் மனைவி Meghan (வயது 38) ஏற்கனவே கனடா சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
.
கடந்த நத்தார் பண்டிகை காலத்தில் ஹரி, Meghan, அவர்களின் குழைந்தை ஆகிய மூவரும் இராணி குடும்பத்துடன் இருந்திருக்கவில்லை. பதிலாக அவர்கள் வடஅமெரிக்காவிலேயே இருந்தனர்.
.