தலபான் தாக்குதலுக்கு 48 பேர் பலி

Afhanistan

ஆப்கானிஸ்தானில் தலபான் இன்று நடாத்திய இரண்டு தற்கொலை தாக்குதல்களுக்கு குறைந்தது 48 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
.
தலைநகருக்கு வடக்கே ஆப்கானித்தான் ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க தூதுவரகத்துக்கு அருகே இடம்பெற்ற இன்னோர் தாக்குதலுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர்.
.
இரண்டு தாக்குதல்களையும் தாமே செய்ததாக தலபான் உரிமை கூறியுள்ளது. இந்த மாதம் 28ஆம் திகதி அங்கு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நிறுத்துவதே தமது நோக்கம் என்றுள்ளது தலபான்.
.
தற்போது தலபான் ஆப்கானிஸ்தானின் சுமார் 70% பகுதிகளில் வெளிப்படையாக இயங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 18 வருடங்களாக அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் தலபானை அடக்க முனைந்து வருகின்றன.
.