திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

Brexit என்ற அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவின் நிலை மேலும் குழப்ப நிலையில் உள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பிரிவு இணக்கம் ஒன்று ஏற்படவேண்டும். ஆனால் இறுதி பேச்சுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

பிரித்தானிய பிரதமர் Boris Johnson இன்று தனது கூற்றில் தீர்மானம் இன்றிய பிரிவுக்கு அதிகமான சாத்தியக்கூறுகள் (strong possibility) உண்டு என்றுள்ளார்.

சட்டப்படி பிரித்தானிய இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவிட்டது. அதற்கான இணக்கப்பாடுகள் ஒருவருடத்துள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். அந்த கால எல்லைக்கு மேலும் 20 தினங்கள் இருக்கையில் பேச்சுக்கள் மீண்டும் முறிந்து உள்ளன.

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி இணக்கம் இன்றி பிரித்தானிய வெளியேறினாலும் தான் பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கையை செய்வேன் என்று கூறி பிரித்தானிய பிரதமருக்கு ஆசை வளர்த்திருந்தார். ஆனால் தற்போது ரம்புக்கு பதிலாக பைடென் ஆட்சிக்கு வருகிறார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி இணக்கம் இன்றி வெளியேறினால் அமெரிக்கா பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை செய்யாது என்று பைடென் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட கடலில் பிரித்தானியா மீன் பிடிப்பது, எல்லை விதிமுறைகள் என்பன முரண்பாடுகளுக்கு பிரதான காரணங்களாக உள்ளன.