திருவானந்தபுரம் வந்த 36 kg தங்கம் அகப்பட்டது

Gold_Bar

United Arab Emirates (UAE) இல் இருந்து கேரளா மாநிலத்து விமான நிலையமான திருவானந்தபுரம் வந்த 30 kg (66 lb) தங்கம் சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அகப்பட்ட இந்த தங்கம் UAE க்கான diplomatic பொதியுள் இருந்துள்ளது. .
Diplomatic பொதிகள் சாதாரணமாக சோதனை செய்யப்படுவது இல்லை. Vienna Convention முறைப்படி சந்தேகத்துக்குரிய பொதிகள் அனுப்பும் நாட்டு முகவர் மத்தியிலேயே ஆராயப்படவேண்டும்.
.
இந்த பொதி திருவானந்தபுரத்தில் உள்ள UAE தூதரக கிளை ஊழியர் ஒருவருக்கு முகவரி இடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த உள்ளூர் ஊழியர் 7 மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு உள்ளார் என்கிறது UAE. தமக்கும் இந்த பொதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறது UAE. தாம் இந்திய போலீசாரின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் கூறுகிறது UAE.
.
கேரளாவின் எதிர் கட்சிகள் முதலமைச்சரை பதவி விலகும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர் தனக்கும் அகப்பட்ட தங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றுள்ளார்.
.
Sarith Kumar மற்றும் Swapna Suresh ஆகியோரை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது.
.
World Gold Council கருத்துப்படி 2019 ஆண்டு மட்டும் 115 தொன் முதல் 120 தொன் வரையான தங்கம் இந்தியாவுக்குக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு உள்ளது. கரோனா விமான சேவைகளை நிறுத்தியதால் தங்கம் கடத்தலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
.