துருக்கியின் Hagia Sophia மீண்டும் பள்ளிவாசலானது

Hagia_Sophia

Hagia Sophia என்பது 537 ஆம் ஆண்டு தற்போதைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் Eastern Roman Empire ரினால் கட்டப்பட்ட கிறீஸ்தவ தேவாலயம். 1204 ஆம் ஆண்டில் இது Latin Empire ரினால் Roman Catholic தேவாலயமாக ஆக மாற்றப்பட்டது.
.
Ottaman Empire வளர்ச்சியின் பின், 1453 ஆம் ஆண்டு, இது இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. அப்போது அங்கு ஆட்சியில் இருந்த Constantinople 1453 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி Ottoman படைகளால் அழிக்கப்பட்டது. Sultan Mehmet II மேற்படி தேவாலயத்தை பள்ளிவாசல் ஆக மாற்ற உத்தரவிட்டார்.
.
1935 ஆம் ஆண்டு இது நூதனசாலையாக மாற்றப்பட்டது. தற்போதைய துருக்கியின் முதல் சனாதிபதி Mustafa Kemal Ataturk வின் உத்தரவுக்கு அமையவே இது நூதனசாலை ஆக மாற்றப்பட்டது. இது ஒரு UNESCO World Heritage நிலையம் ஆகவும் பதியப்பட்டு உள்ளது.
.
இன்று இது மீண்டும் இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்படுகிறது. தற்போதைய துருக்கி சனாதிபதி Recep Tayyip Erdogan இதை மீண்டும் பள்ளிவாசலாக மாற்ற முனைந்து வந்துள்ளார். இன்று ஜூலை 10 ஆம் திகதி இது மீண்டும் பள்ளிவாசல் ஆகிறது.
.
வருடம் ஒன்றில் சுமார் 3.7 மில்லியன் மக்கள் இந்த நிலையத்தை பார்வையிட செல்கின்றனர்.
.