தோட்ட தொழில் விசா மூலம் அஸ்ரேலிய குடியுரிமை

தோட்ட தொழில் விசா மூலம் அஸ்ரேலிய குடியுரிமை

அஸ்ரேலியா சென்று அங்குள்ள தோட்டங்களில் (farm) நீண்ட காலம் தொழில் செய்ய இணங்கும் பிற நாட்டவருக்கு தோட்ட தொழில் விசா வழங்கி, பின்னர் அவர்களுக்கு நிறைந்த வதிவுரிமையும் வழங்க அஸ்ரேலியா தீர்மானித்து உள்ளது.

பிலிப்பீன், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாட்டவரே முதலில் இந்த திட்டத்துக்கு உட்படுவர். அஸ்ரேலியாவில் தோட்ட வேலைகள் செய்யும் தொழிலாருக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டதே காரணம்.

இவர்கள் Northern Territory பகுதியில் மாம்பழம், வெள்ளரி, பூசணி போன்றவற்றையும், Queensland பகுதியில் தக்காளி, raspberries போன்றவற்றையும், Victoria பகுதியில் திராட்சையையும் அறுவடை செய்வர்.

அண்மை காலம் வரை பிரித்தானிய backpackers தமது விசாவை தோட்டங்களில் தொழில் செய்வதன் மூலம் நீடிக்க வசதி இருந்தது. அதனால் அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்திருந்தனர்.

ஆனால் அண்மையில் பிரித்தானியாவுடன் செய்துகொண்ட வர்த்தக இணக்கப்படி மேற்படி நிபந்தனை நீக்கப்பட்டது. அதனால் சுமார் 10,000 பிரித்தானிய தொழிலாளரை அஸ்ரேலிய தோட்டங்கள் இழந்தன.

ஆனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்படி திட்டம் குறைந்த ஊதியத்துக்கு தொழிலாரை பெற செய்யும் தவறான முயற்சி என்றுள்ளன. இவர்களுக்கு வழங்கப்படும் வதிவிடங்களில் பல மிகவும் தரம் குறைந்தவை என்றும் கூறப்படுகிறது.