நியூ யார்க் அடுக்குமாடி தீக்கு 19 பேர் பலி

நியூ யார்க் அடுக்குமாடி தீக்கு 19 பேர் பலி

இன்று ஞாயிறு அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் Bronx பகுதியில் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு தீக்கு குறைந்தது 19 பலியாகி உள்ளனர். பலியானோரில் 9 சிறுவர்களும் அடங்குவர்.

காலை சுமார் 11:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தீயால் மேலும் 32 பேர் பாரிய தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குளிர்காலத்தில் வீட்டை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் இயங்கும் space heater ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ உருவானதாக கூறப்படுகிறது.

தீ ஆரம்பித்த வீட்டின் கதவுகளை திறந்து விட்டப்பட்டபடியால் புகை மற்றைய வீடுகளுக்கும் பரவி உள்ளது. புகை சுவாசமே அதிக மரணங்களுக்கு காரணமாகி உள்ளது.

333 East 181st Street என்ற முகவரியில் உள்ள 19 மாடிகளை கொண்ட வீட்டு தொகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. இந்த கட்டிடத்தில் அதிகமாக இஸ்லாமியரே குடியிருந்தனர்.