நீதிமன்றம் செல்லும் கனடிய Rogers குடும்ப சண்டை

நீதிமன்றம் செல்லும் கனடிய Rogers குடும்ப சண்டை

Rogers Communication கனடாவின் மிகப்பெரிய நிறுவனம். Rogers Wireless, Fido Wireless, Chatr Wireless, Rogers Cable, Rogers Sports, Blue Jays team, Maple Leafs team, Raptors team அனைத்தும் இதன் அங்கம். சுமார் $24 பில்லியன் (C$30 பில்லியன்) பெறுமதியான இந்த நிறுவனத்தை ஆளும் Rogers குடும்ப சண்டை தற்போது நிறுவனத்தை நீதிமன்றம் இழுத்துள்ளது.

1960ம் ஆண்டுகளில் Ted Rogers என்பவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அவர் 2008ம் ஆண்டு மரணமாகியபின் குடும்ப சண்டை தலைதூக்கி உள்ளது.

Edward Rogers என்ற 52 வயது மகன் திடீரென Rogers நிறுவனத்தின் CEO பதவியில் இருந்த Joe Natale என்பவரை நீக்கி, தனக்கு விருப்பமான Tony Staffieri என்பவரை நியமித்து உள்ளார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் Staffieri சில தினங்களின் பின் தனது பதவியை விட்டு விலகி உள்ளார்.

Matriarch Rogers என்ற 82 வயது தாயும், அவரின் இரண்டு மகள்மாரும் Edward செயலை நிராகரித்து உள்ளனர். தாயும், மகள்மாரும் Edward ஐ chairman பதவியில் இருந்து நீக்கியும் உள்ளனர். மகன் தற்போது British Columbia நீதிமன்றில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Shaw Communications என்ற போட்டி நிறுவனத்தை Rogers கொள்வனவு செய்ய உள்ள நிலையிலேயே இந்த குடும்ப சண்டை நீதிமன்றம் வந்துள்ளது.