பனாமா ஆளுநர் பயணித்த காரில் 79 போதை பொதிகள்

பனாமா ஆளுநர் பயணித்த காரில் 79 போதை பொதிகள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் (Panama) Guna Yala என்ற வடகிழக்கு மாநில ஆளுநர் Erick Martelo பயணித்த காரில் 79 போதை பொதிகள் இருந்தமை அந்நாட்டு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படியில் அவர்கள் கார் ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறுத்தி உள்ளனர். அந்த காரிலேயே 79 பொதிகள் போதை இருந்துள்ளன. அந்த காரில் பயணித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இருவருள் ஒருவர் Erick Martelo என்ற ஆளுநர்.

போதை பொதிகள் மேற்படி காரின் ஆசனங்களுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஆளுநரை பதிவியில் இருந்து உடனடியாக நீக்கும்படி தனது அமைச்சுக்கு பனாமாவின் சனாதிபதி Cortizo பணித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆளுனரோ அல்லது அவர் தரப்பில் எவருமோ கைது தொடர்பாக இதுவரை கருத்து எதையும் கூறவில்லை.

Guna Yala மாநிலம் கிழக்கே கொலம்பியாவின் எல்லையை கொண்டது. வடக்கே Caribbean கடலை நீண்ட கரையோரமாக கொண்டது.