பலஸ்தீனாரின் ஏற்றுமதிக்கு இஸ்ரேல் தடை

UN_Israel_Palestinian

அண்மை காலம்வரை West Bank பலஸ்தீனர் தமக்கு தேவையான இறைச்சி மாடுகளை இஸ்ரேலிடம் இருந்தே கொள்வனவு செய்து வந்திருந்தனர். உண்மையில் அந்த மாடுகளை இஸ்ரேல் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பின் பலஸ்தீனர்க்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது.
.
அவ்வாறு இடைத்தரகர் மூலம் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு பதிலாக பலஸ்தீனர் நேரடியா இறைச்சி மாடுகளை இறக்குமதி செய்ய முற்பட்டனர். அதனால் வருமானத்தை இழந்த இஸ்ரேல் பலஸ்தீனர்களிடம் இருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதை நிறுத்தினர்.
.
உடனடியாக பலஸ்தீனர் தமது மரக்கறி உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஜோர்டான் மூலம் ஏற்றுமதி செய்ய முனைந்தனர். நிலைமை தமது கடுப்பாட்டை மீறியதை கண்ட இஸ்ரேல்  பலஸ்தீனர் தமது உற்பத்திகளை ஜோர்டானுக்கு அனுப்புவதை தடை செய்துள்ளது.
.
கடந்த வருடம் சுமார் $88 மில்லியன் பெறுமதியான மரக்கறிகளை பலஸ்தீனர் இஸ்ரேலுக்கு விற்பனை செய்திருந்தனர். அதேவேளை சுமார் 120,000 இறைச்சி மாடுகளை மாதம் ஒன்றில் பலஸ்தீனர் இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தனர்.
.