பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

Kashmir

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர்.
.
இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammmed என்ற ஆயுத குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்த குழுவின் முகாம்கள் மீதே இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியா கூறுகின்றது.
.
பாகிஸ்தான் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு தாம் பதில் தாக்குதல் செய்யவுள்ளதாகவும் கூறி உள்ளது.
.
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோதியின் இந்த தாக்குதல் இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலை நோக்கமாக கொண்டது என்றும் கூறியுள்ளார்.
.
இந்தியாவின் தாக்குதலுக்கு உள்ளான Balakot என்ற இடம், பாகிஸ்தானின் கடுப்பாட்டுள் உள்ள காஸ்மீர் பகுதியில் அமையாதது, அதற்கும் அப்பால் பாகிஸ்தானுக்கு உள்ளே அமைத்துள்ள இடமாகும்.
.