பாகிஸ்தான்-பங்களாதேச உறவை சீனா வளர்க்கிறது?

பாகிஸ்தான்-பங்களாதேச உறவை சீனா வளர்க்கிறது?

பாகிஸ்தானுக்கும், பங்களாதேசத்துக்கும் இடையிலான உறவை சீனா வளர்கின்றது என்று இந்தியா அச்சம் கொண்டுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தான் பங்களாதேசத்தினருக்கான விசா நிபந்தனையை நீக்கி உள்ளது. அத்துடன் 1971ம் ஆண்டு யுத்தங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வலிமை குறைந்திருந்த கிழக்கு பாகிஸ்தான் வலிமை கூடிய மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேசம் ஆனா காலத்தில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவு குன்றி இருந்தது. இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் அவர்களுக்கு இடையில் வெறுப்பு அண்மைக்காலம் வரை தொடர்ந்தது.

தற்போதைய பாகிஸ்தான்-பங்களாதேச நெருக்கத்தை சீனாவே தனது நலனுக்காக வளர்கின்றது என்று இந்தியா கருதுகிறது. சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதுவர் Pinak Chakarvarty அவ்வாறே கருதுகிறார். இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்புவாத பா.ஜ. ஆட்சியின் நடவடிக்கைகளும் சீனாவின் முயற்சிக்கு சாதகமா அமைகின்றன

Bangladesh Nationalist Party பாகிஸ்தானுடன் உறவை அதிகரிக்க விரும்பும் பங்களாதேசத்தின் அரசியல் கட்சி ஒன்று.