பாகிஸ்தான் ரயில் தீக்கு 74 பேர் பலி

Tezgam

பாகிஸ்தானின் தென்பகுதி நகரமான கராச்சியில் இருந்து வடபகுதி நகரமான ராவல்பிண்டி நோக்கி சென்ற ரயிலில் பரவிய தீக்கு குறைந்தது 74 பேர் பலியாகியும், 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பயணிகள் தமது உணவை சமைக்க பயன்படுத்திய gas cylinder ஒன்று வெடித்ததாலேயே இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.
.
குறைந்தது 3 வண்டிகள் இந்த தீக்கு இரையாகி உள்ளன. Tezgam என்ற இந்த ரயில் சேவைக்கு கராச்சியில் இருந்து ராவல்பிண்டி செல்ல சுமார் 25 மணித்தியாலங்கள் தேவைப்படும்.
.
நீண்ட தூரம் செல்லும் வறிய பயணிகள் தமது உணவுகளை தாமே தயாரிப்பதாக கூறப்படுகிறது. Gas cylinder களை ரயிலில் எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், பயணிகள் இந்த தடையை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது.
.