பாக்தாத் கரோனா வைத்தியசாலை தீக்கு 82 பேர் பலி

பாக்தாத் கரோனா வைத்தியசாலை தீக்கு 82 பேர் பலி

ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் கரோனா நோயாளிகளை கொண்டிருந்த Ibn al-Khatib என்ற வைத்தியசாலையில் oxygen tank ஒன்று சனிக்கிழமை இரவு வெடித்ததால் தீ மூண்டு, அத்தீக்கு குறைந்தது 82 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

அந்த வைத்தியசாலையின் ICU தளத்திலேயே தீ பரவி உள்ளது. அந்த தளத்தில் ICU சேவை பெறும் 30 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஞாயிரு அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

தீயில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்த நோயாளிகளை oxygen தொடர்பில் இருந்து விடுவித்த பொழுது சிலர் மரணித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஈராக்கில் இதுவரை 1,025,288 பேர் கரோனா தொற்றி உள்ளதாகவும், 15,217 கரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.