பிரித்தானிய அடிமை வர்த்தகர் Colston சிலை உடைப்பு

Colston

17 ஆம் நூற்றாண்டில் அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த Edward Colston என்பவரின் உருவச்சிலை ஒன்று ஆர்பாட்டகாரர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. உடைக்கப்பட்ட சிலை பின்னர் அருகில் உள்ள துறைமுகத்துள் வீசப்பட்டு உள்ளது.
.
பிரித்தானியாவின் Bristol நகரில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. Bristol நகரம் சுமார் 84.0% வெள்ளை இனத்தவரையும், 6.0% கருப்பு இனத்தவரையும் கொண்ட நகரம்.
.
முதலில் ஆடை, பழம், பழரசம், எண்ணெய் போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த இவர் பின்னர் Royal African Company என்ற ஆக்கிரமிப்பு ஆட்சி நிறுவதில் அங்கம் கொண்டிருந்தார். அக்காலத்தில் Calston சுமார் 80,000 அடிமைகளை ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தி விற்பனை செய்தவர். இவர்களில் சுமார் 19,000 பேர் அமெரிக்காவை அடைய முன்னரே மரணித்து இருந்தனர்.
.
1721 ஆம் ஆண்டில் மரணித்த இவர் தனது சொத்துக்களை பொதுப்பணிகளுக்கு (charities) தனது உயில் (will) மூலம் அளித்து இருந்தவர். இவரின் பெயர் வீதிகள், பாடசாலைகள், கட்டிடங்கள் ஆகியவற்றில் உள்ளன. ஆனால் 300 ஆண்டுகளின் பின் நிலைமை மாறி வருகிறது.
.
Priti Patel என்ற பிரித்தானியாவின் Home Secretary மேற்படி சிலை உடைப்பை “utterly disgraceful” என்று கண்டித்து உள்ளார்.
.