பிரித்தானிய மாணவருக்கு 17 வயது இலங்கை tutors

பிரித்தானிய மாணவருக்கு 17 வயது இலங்கை tutors

பிரித்தானிய மாணவருக்கு tutors சேவையை 17 வயது வரையான இலங்கையர் வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அத்துடன் 17 வயதானோருக்கு சுமார் 1.57 பௌண்ட்ஸ் ($2.18) ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. Third Space Learning (TSL) என்ற இலாப நோக்கம் கொண்ட நிறுவனம் மூலமே இலங்கையர் சேவைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மேற்படி விபரம் வெளிவந்த பின் பிரித்தானியாவின் Department of Education 18 வயதுக்கு கீழானோரை tutors சேவைக்கு அமர்த்துவதை தடை செய்துள்ளது.

பிரித்தானிய அரசு 350 மில்லியன் பௌண்ட்ஸ் ($485 மில்லியன்) செலவில் இந்த National Tutoring Programme (NTP) சேவையை நடைமுறை செய்திருந்தாலும், பெருமளவு பணம் இடைத்தரகரின் இலாபத்துக்கு செல்கிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் TSL சுமார் 800 பாடசாலைகளுக்கு tutor சேவை வழங்கி உள்ளதாக NTP கூறியுள்ளது. TSL நிறுவனம் இலங்கையில் ஒரு நிலையத்தையும், இந்தியாவில் இரண்டு நிலையங்களையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஒரு வகுப்புக்கு (session) 425 ரூபாய்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

TSL நிறுவன CEO Tom Hooper தாம் பட்டதாரிகளையே சேவைக்கு அமர்த்துவதாக கூறியுள்ளார். ஆனால் இலங்கையில் 17 வயதுடையோர் பட்டதாரிகளாக இருப்பது சாத்தியம் அல்ல.

TSL ஒவ்வொரு வகுப்புக்கும் NTP அமைப்பிடம் இருந்து 18.33 பௌண்ட்ஸ் பெறுகிறது. அதில் ஒரு சிறு தொகையே வகுப்புகளை வழக்குவோருக்கு செல்கிறது.