பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வருகிறார்

Priyanka

ராஜீவ் காந்தியினதும், சோனியா காந்தியினதும் மகள் பிரியங்கா காந்தி அரசிலுக்கு வருவதாக அனைத்து இந்திய காங்கிரஸ் இன்று (2019-01-23) கூறியுள்ளது. பிரியங்கா காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தியும் ஆவார். இவரின் சகோதரர் ராகுல் காந்தியே தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஆவார்.
.
காங்கிரஸ் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பிரியங்கா இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு General Secretary ஆக பதவி வகிப்பார். இதுவரையும் தனது சகோதரருக்கு ஆதரவாக பிரியங்கா பிரச்சாரங்கள் செய்திருந்தாலும், தான் அரசியலுக்கு வருவதை தவிர்த்து வந்துள்ளார்.
.
சிலரின் கருத்துப்படி, ராகுல் காந்தி கொண்டுள்ள பொதுசன ஆதரவிலும் அதிகம் ஆதரவை பிரியங்கா கொண்டுள்ளார். அதனால் பிரியங்காவின் அரசியல் பிரவேசம், பிரதமர் மோதிக்கும், அவரின் கட்சியான பா.ஜ. கட்சிக்கும் மேலும் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கும்.
.
புத்தமத படிப்பில் MA பட்டம் பெற்ற இவர் Robert Vadra என்ற டில்லி வர்த்தகரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு Raihan என்ற மகனும், Miraya என்ற மகளும் உள்ளனர். பிரியங்கா தற்போது புத்தசமயத்தை பின்பற்றுபவர் என்றும் கூறப்படுகிறது.

.