பிர்லாவுக்கு இழப்பு $3 பில்லியன்

Birla

இந்தியாவில் தற்போது 3 ஆவது பெரிய நிறுவனமாக விளங்கும் Aditya Birla Group வர்த்தகத்தின் பிரதான உரிமையாளரான குமார் மங்களம் பிர்லா (Kumar Mangalam Birla) அண்மையில் சுமார் $3 பில்லியன் வெகுமதியை பங்குச்சந்தியில் இழந்துள்ளார்.
.
பிரித்தானியாவின் Vodafone என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து Vodafone Idia என்ற தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான இது கடந்த காலாண்டில் மட்டும் $7.14 பில்லியன் இழப்பை அடைந்துள்ளது. அதனால் இதன் பங்கு ஒன்றி விலை சுமார் 90% ஆல் வீழ்ந்துள்ளது.
.
Vodafone இழப்பால் இதுவரை சுமார் $9 பில்லியன் வெகுமதியை கொண்டிருந்த பிர்லா, தற்போது $6 பில்லியன் வெகுமதியை மட்டும் கொண்டுள்ளார். Vodafone Idea நிறுவனத்தில் இரண்டாவது அதிக முதலீட்டை Aditya Birla Group கொண்டுள்ளது.
.
தற்போது சுமார் 120,000 பணியாளர்களை உலகம் எங்கும் கொண்டுள்ள பிர்லா அமைப்பு 1857 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
.