புதிய பிரித்தானிய பிரதமரின் முதல் தோல்வி

UK_EU

முன்னாள் பிரித்தானிய பிரதமர் மே (May) அவரது பதவிக்கு தகுதி அற்றவர் என்று கூறி பதவிக்கு ரம்ப் வகையில் பதவிக்கு வந்த Boris Johnson இன்று தனது முதலாவது Brexit சார்பான தோல்வியை அடைந்துள்ளார். தனது no-deal முறையில் (ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு இணக்கத்தை அடையாது) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற கொண்டிருக்கவுள்ள வல்லமையை ஜான்சன் இன்று இழந்துள்ளார்.
.
பிரித்தானிய பாராளுமன்றம் இன்று வாக்கெடுப்பு மூலம் கொண்ட தீர்மானம் பிரதமரின் no-deal வெளியேற்ற முறையை தடை செய்துள்ளது. ஜான்சனின் கட்சி பெரும்பாண்மை ஆசனங்களை கொண்டிருந்தாலும், இன்றைய வாக்கெடுப்பில் 21 ஜான்சன் கட்சிக்காரரும் (Tory கட்சி) ஜான்சனுக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். ஜான்சனை கட்டுப்படுத்தும் தீர்மானம் 328 வாக்குகளை பெற்று வென்றுள்ளது. ஜான்சன் தரப்புக்கு 301 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
.
வாக்கெடுப்பு முன் ஜான்சன் தனக்கு எதிராக வாக்களிக்கும் Tory கட்சியினரையும், வாக்கெடுப்புக்கு சமூகம் அளிக்காத Tory கட்சியினரையும் தண்டிக்கவுள்ளதாக கூறி இருந்தார். ஆனால் 21 தன் கட்சிக்காரரை அவரால் தண்டிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
.
அங்கு விரைவில் இன்னோர் தேர்தல் இடம்பெறவும் வாய்ப்புண்டு. ஆனாலும் இந்த Brexit விவகாரம் பிரித்தானியாவை தொடர்ந்தும் பாதித்துக்கொண்டே இருக்கலாம்.

.