பைடென் குழு மீது மேலுமொரு சாதி குற்றச்சாட்டு

பைடென் குழு மீது மேலுமொரு சாதி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாகவுள்ள பைடென் குழு ஒன்றின் மீது மேலுமொரு இந்திய சாதி பாகுபாட்டு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கரோனா தடுப்பு பணிகளை சனாதிபதி சார்பில் செய்யும் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட குழுவில் அங்கத்துவம் கொண்ட Celine Gounder மீதானதே இந்த புதிய குற்றச்சாட்டு.

Celine னின் தந்தையார் தமிழ்நாட்டு பெரும்பாளையம் கிராமத்து தமிழர். 1960 களில் அமெரிக்கா சென்ற Raj Natarajan என்பவரே பின்னர் தனது பெயரை Raj Gounder என்று மாற்றி இருந்தார். Gounder என்ற சொல் தற்போது தமிழில் கவுண்டர் என்று கூறப்பட்டாலும், இது காமிண்டர் என்ற உயர்சாதியை குறிக்கும் சொல் என்று கூறப்படுகிறது. மன்னர் காலங்களில் இவர்கள் ஊர்களில் அதிகாரம் கொண்டவர்கள்.

1977 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த Celine ஒரு வைத்தியர். இவரின் தயார், Natarajan னின் மனைவி, பிரான்ஸ் நாட்டின் Normandy பகுதியினர். Celine னின் கணவர் Grant Wahl. திருமணத்தின் பின்னர் Celine தனது Gounder என்ற குடும்ப பெயரை Wahl ஆக மாற்றவில்லை.

ஏற்கனவே உதவி சனாதிபதியாக வெற்றி அடைந்த கமலா ஹாரிஸ் ஆதிக்க சாதியினர் என்று அடையாளம் காட்டுவதாக அமெரிக்காவில் உள்ள தாலித்துக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.