பைடென் மெல்ல முன்னேற ரம்ப் நீதிமன்றம் செல்கிறார்

பைடென் மெல்ல முன்னேற ரம்ப் நீதிமன்றம் செல்கிறார்

நேற்று இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் கணிப்பீடுகள் தொடரும் வேளையில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதை தடுக்கும் நோக்கில் ரம்ப் நீதிமன்றம் செல்கிறார்.

தற்போது பைடென் 264 electoral வாக்குகளையும், ரம்ப் 214 வாக்குகளையும் வென்றுள்ளனர். சனாதிபதியாக வெல்ல மொத்தம் 538 electoral வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளை தேவை. Nevada (6 வாக்குகள்) மாநிலத்தில் பைடேன் சிறிதளவு முன்னணியில் உள்ளார். இந்த மாநிலத்தையும் பைடேன் பெற்றால் அவருக்கு சனாதிபதி பதவியை கைப்பற்ற தேவையான 270 வாக்குகள் கிடைக்கும்.

அதேவேளை Pennsylvania (20 வாக்குகள்), North Carolina (15), Georgia (16) ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணல் தொடர்கின்றன. Pennsylvania மாநிலத்தில் அதிகமான அஞ்சல் வாக்குகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அவ்வாறு வரும் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதை தடுக்க ரம்ப் முனைகிறார். அஞ்சல் வாக்குகள் பெருமளவில் பைடென் வாக்குகளே.

Pennsylvania, North Carolina, Georgia, Alaska (3) ஆகிய நாலு மாநிலங்களையும் ரம்ப் பெற்றாலும், தற்போதைய கணிப்புக்கள் தொடர்ந்தால், அவருக்கு 268 வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

ரம்ப் தரப்பு சில மாநில வாக்கு எண்ணும் பணியை மீண்டும் செய்ய நீதிமன்றை கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் தரப்பு சட்டதரணிகள் இது தொர்பாக ஆராய்கின்றனர்.

அமெரிக்காவில் தேர்தல் சட்டங்கள் மாநிலங்களுக்கு உரியன. அதனால் தேர்தல் சட்டங்கள், வாக்களிப்பு நடைமுறைகள் எல்லாம் ஒரேவிதமானவை அல்ல.

2016 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் 128 மில்லியன் (128,838,342) வாக்குகள் (கழிவுகள் நீங்கலாக) அளிக்கப்பட்டு இருந்தன. இம்முறை ஏற்கனவே சுமார் 140 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.