பொதுமன்னிப்பு வழங்க ரம்ப் தரப்பு இலஞ்சம் பெற்றது?

பொதுமன்னிப்பு வழங்க ரம்ப் தரப்பு இலஞ்சம் பெற்றது?

வெள்ளைமாளிகை அல்லது ரம்பின் கட்சி இதுவரை பெயர் குறிப்பிடப்படாத குற்றவாளி ஒருவருக்கு இலஞ்சம் பெற்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு (presidential pardon) வழங்கியதா என்று கண்டறிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நீதி திணைக்களத்தால் (justice department) ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை தொடர்பான உண்மைகள் தற்போதே வெளிவந்து உள்ளன.

சனாதிபதி ரம்ப் இந்த செய்தியையும் வழமைபோல் ‘fake news’ சாடியுள்ளார்.

கடந்த கிழமை ரம்ப் 2017 ஆம் ஆண்டு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட Michael Flynn என்ற தனது முன்னாள் ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கி இருந்தார். முன்னாள் லெப். ஜெனரல் Flynn 23 தினங்கள் மட்டுமே ரம்பின் பாதுகாப்புக்கான ஆலோசகராக பதவி வகித்தவர். 2016 ஆம் ஆண்டு தேர்தல் காலங்களில் Flynn ரம்பின் மேடைகளில் ஏறி ரம்புக்கு ஆதரவாக பரப்புரை செய்தவர்

மறுபுறம் ரம்ப் தனது மகன் Eric, மகள் Ivanka, மருமகன் Jared Kushner உட்பட தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே பொதுமன்னிப்பு (pre-emptive pardon) வழங்கு முனைவதாகவும் கூறப்படுகிறது. பைடென் ஆட்சியில் தன் மீதும், தனது குடும்பத்தவர் சிலர் மீதும் வருமானவரி வழக்குகள் தொடரப்படலாம் என்று ரம்ப் பீதி கொண்டுள்ளார். சனாதிபதி என்ற வகையில் தற்போது உள்ள சட்ட பாதுகாப்பு ஜனவரி 20 ஆம் திகதிக்கு பின் நிறுத்தப்பட்டுவிடும்.

1974 ஆம் ஆண்டு அக்கால சனாதிபதி Gerald Ford அவருக்கு முன் சனாதிபதியாக இருந்த Richard Nixon னை Watergate விசயத்தில் இருந்து பாதுகாக்க முன்கூட்டிய பொதுமன்னிப்பு (pre-emtive) வழங்கி இருந்தார்.