பொய்யான அமெரிக்க பல்கலைக்கழகம், 129 கைது

India-US

அமெரிக்க அரசு இயக்கிய பொய்யான பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்த 129 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால் விசனம் கொண்டுள்ளது இந்திய அரசு. டில்லியில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டு உள்ளது.
.
அமெரிக்காவுக்கு உண்மையான மாணவ விசாவில் (student visa) செல்லும் இந்தியர்கள், அங்கு தொடர்ந்து வசிக்க தொடர்ச்சியான படிப்பை பயன்படுத்துவது உண்டு. ஆனால் விசா பெற பயன்படுத்திய உண்மையான கல்வி நிலையம் போல் தொடர்ச்சியான படிப்புக்கு பயன்படுத்தும் கல்வி நிலையங்கள் இருப்பதில்லை. தொடர்ச்சியான படிப்புக்கு பயன்படுத்தப்படும் கல்வி நிலையங்களை அமெரிக்க குடிவரவு திணைக்களம் ஆழமாக விசாரித்து ஆராய்வதும் இல்லை. அதனால் விசா நீடிப்பு பயன்பாட்டுக்கென குறைந்த கட்டனம் அறவிடும் பல பொய்யான கல்வி நிலையங்கள் அமெரிக்காவில் தோன்றி உள்ளன.
.
இதை தடுக்க அமெரிக்காவின் குறிவரவு திணைக்களத்தின் அங்கமான ICE (Immigration and Customs Enforcement) தானும் University of Farmington என்ற ஒரு பொய்யான பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து, இவ்வகை விசா நீடிப்பை நாடும் மாணவரை உள்வாங்கி, பின் கைது செய்துள்ளது. இவ்வகை படிப்புக்கான கட்டணமாக வருடம் ஒன்றுக்கு சுமார் $8,500 கட்டணமாக அறவிடப்பட இருந்தது.
.
இவ்வாறு ICE தூண்டில் போட்டு தம் நாட்டவரை கைது செய்ததால் விசனம் கொண்டுள்ளது இந்தியா.
.
2016 ஆம் ஆண்டிலும் University of Northern New Jersey என்ற பெயரில் இவ்வகை பொய் பல்கலைக்கழகம் ஆரம்பித்து, 21 வெளிநாட்டவரை கைது செய்திருந்தது அமெரிக்கா.

.