மனைவி கட்சி தாவ, கணவன் விவாகரத்துக்கு அழைப்பு

மனைவி கட்சி தாவ, கணவன் விவாகரத்துக்கு அழைப்பு

தனது மனைவி மாற்று கட்சிக்கு தாவ Saumitra Khan என்ற பா.ஜ. கட்சி உறுப்பினரான கணவன் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Saumitra Khan (வயது 40) என்பவர் மேற்கு வங்காள மாநிலத்து பா.ஜ. கட்சி (BJP) பாராளுமன்ற உறுப்பினர். அவரின் மனைவி Sujata Mondal Khan அண்மையில் அங்கு Mamata Banerjiee தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள Trinamool Congress கட்சியிக்கு (TMC) தாவி உள்ளார். அதனால் விசனம் கொண்ட கணவனே விவாகரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பத்திரிகையாளர் முன் Trinamool கட்சி தனது 10 ஆண்டுகால மனைவியை பறித்து விட்டது என்று கூறி அழுதுள்ளார் கணவன். அத்துடன் மனைவி எதிர்வரும் காலங்களில் தனது “Khan’ என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

தான் உறுப்பினராக இருந்த பா.ஜ. கட்சி தனக்கு உரிய மரியாதையை வழங்காது, ஊழல் மிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்வாங்கி, அதிகாரங்களையும் வழங்கி உள்ளது என்று கூறியே மனைவி கட்சி தாவியுள்ளார்.

உண்மையில் கணவன் முன்னர் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்து, 2013ம் ஆண்டு TMC கட்சிக்கு தாவி, பின் 2019ம் ஆண்டே பா.ஜ. கட்சிக்கு தாவி இருந்தவர்.

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே காலத்தில் தேர்தல் இடம்பெறவுள்ளது.