மன்னாரில் மண் அகழ்வுக்கு துடிக்கும் அஸ்ரேலிய நிறுவனம்

மன்னாரில் மண் அகழ்வுக்கு துடிக்கும் அஸ்ரேலிய நிறுவனம்

அஸ்ரேலியாவின் Perth நகரை தளமாக கொண்ட Titanium Sands என்ற நிறுவனம் மன்னார் தீவில் இல்மனைட் (ilmenite) அகழ்வுக்கு வேகமாக முனைந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் இணையத்தில் இந்த விசயம் முன்பக்கத்தில் பதிக்கப்பட்டு உள்ளது.

மன்னார் தீவு பகுதி வங்காலை பறவைகள் சரணாலயத்தை கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதி. அகழ்வு பணிகள் மூலம் இப்பகுதியின் இயற்கையை குழப்புவதை இலங்கை சூழலியலாளர் எதிர்க்கின்றனர். சைபீரியாவில் இருந்து வரும் இடப்பெயர்வு பறவைகள் சுமார் 30 நாடுகளை தாண்டி ஆண்டுதோறும் இங்கு வருகின்றன.

சுமார் 26 km நீளமும் 8 km அகலமும் கொண்ட மன்னார் தீவில் பெருமளவு ilmenite உண்டு. பெறுமதி மிக இல்மனைட் வர்ணப்பூச்சுகள், பிளாஸ்டிக், முக மற்றும் தோல் அலங்காரம் போன்ற பொருட்களை செய்ய பயன்படும்.

2018ம் ஆண்டு Titanium Sands நிறுவனமும், Srinel Holdings Ltd. என்ற நிறுவனமும் மன்னார் தீவில் அகழ்வு ஆய்வுக்கு இணங்கி இருந்தன. இந்த அகழ்வை வரும் 30 ஆண்டுகளில் 8 km நீள, 2 km அகல பரப்பில் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் முதல் படியாக Titanium Sands நிறுவனத்தின் ஆய்வாளர் 3,000 துளைகளை செய்து கனியத்தை ஆய்ந்து உள்ளனர். சில துளைகள் 12 மீட்டர் ஆழம் கொண்டவை, பல 1 முதல் 3 மீட்டர் ஆழம் கொண்டவை.

ஆனால் மேற்படி அகழ்வு இலங்கை சட்டத்துக்கு முரணானது என்கிறது இலங்கை அரசின் GSMB (Geological Surveys and Mines Bureau). Srinel Holding கொண்டுள்ள உரிமையை Titanium Sands பெற முடியாது என்கிறது இலங்கை அரசு. இந்த அகழ்வை விசாரிக்க இலங்கை அரசு குழு ஒன்றை நவம்பர் மாதம் நியமித்து உள்ளது.

Titanium Sands web