மிகையான கரோனா நன்கொடையால் பணவீக்கம்?

மிகையான கரோனா நன்கொடையால் பணவீக்கம்?

கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகள் பெருமளவு பணத்தை வேலையிழந்த தம் மக்களுக்கு மானியமாக (stimulus) வழங்கி இருந்தன. அவ்வகை மானியம் பணவீக்கத்தை (consumer-price inflation) உருவாக்கி உள்ளது என்று கணிப்புகள் தற்போது காட்டுகின்றன.

கரோனா காலத்தில் அமெரிக்கா தனது GDP யின் 25% அளவு பணத்தை மக்களுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தது. இதனால் அமெரிக்காவின் 2020-2021 காலத்து disposable household income 2018-2019 காலத்துடன் ஒப்பிடுகையில் 14.9% ஆல் அதிகரித்து உள்ளது. கனடாவில் இது 13.3% ஆல் அதிகரித்து உள்ளது.

ஆகஸ்ட் மாதத்துக்கான அமெரிக்காவின் ஜூலை மாத பணவீக்கம் 5.4% ஆக உள்ளது. கனடாவின் பணவீக்கமும் 3.7% ஆக உள்ளது. பிரித்தானியா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்து உள்ளன.

Abacus Data கனடாவில் 1,500 பேரிடம் கருத்து கணிப்பு செய்தபோது 63% மக்கள் விலைவாசி அதிகரிப்பையே முதல் பாதகமான விசயமாக கூறியுள்ளனர். இங்கு இறைச்சி, மரக்கறி ஆகியவற்றின் விலை சுமார் 6% ஆல் அதிகரிக்கிறது.

பணவீக்கம் அதிகரிக்க, அரசு தனது வட்டி வீதத்தையும் அதிகரிக்க முனையும். அதனால் வீட்டு கொள்வனவுக்கான மாத கட்டுமானம் போன்ற பெரும் செலவுகளுக்கு அதிக பணம் தேவைப்படும்.

கரோனா காரணமாக கப்பல் போக்குவரத்துக்கு தடைப்பட்டதாலும் பொருள்களின் நகர்வு தடைப்பட்டு விலைவாசிகள் அதிகரிக்க காரணமாக இருந்தன.