முரண்டு செய்தலை கைவிட்டார் ரம்ப், பைடென் தயாராகிறார்

முரண்டு செய்தலை கைவிட்டார் ரம்ப், பைடென் தயாராகிறார்

நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், ரம்ப் இதுவரை தானே வென்றதாக முரண்டு செய்துவந்திருந்தார். அவரின் வாதத்துக்கு ஏற்ப பல வழக்குகளையும் அவர் தரப்பு பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்திருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஏற்கனவே நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இறுதியில் ரம்ப்  தனது அலுவலகர்களை பைடெனின் அணியுடன் இணைந்து பதவி கைமாற்றத்துக்கு ஏற்ப செயற்படுமாறு கூறியுள்ளார். ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க General Services Administration என்ற அலுவலகம் பைடென் அணியின் ஆரம்ப பணிகளுக்கு தேவையான பணத்தை வழங்க முன்வந்துள்ளது.

ஆனாலும் ரம்ப் தான் தோல்வி அடைந்ததாகவோ அல்லது பைடென் வெற்றி அடைந்ததாகவோ இதுவரை கூறவில்லை.

மேற்படி மாற்றத்தின் காரணமாக இன்று செவ்வாய் பைடென் தனது ஆட்சியில் உயர் பதவிகளை கொண்டிருக்கவுள்ள சிலரை அமர்வு ஒன்றில் அறிமுகப்படுத்தி உள்ளார். அவர்களில் பலர் ஒபாமா காலத்து அதிகாரிகள்.