மூன்று இலங்கையர் மீது அமெரிக்கா ஈஸ்டர் தாக்குதல் வழக்கு

மூன்று இலங்கையர் மீது அமெரிக்கா ஈஸ்டர் தாக்குதல் வழக்கு

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் நடத்திய ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் மூவர் மீது அமெரிக்க Justice Department வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று செய்யப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு மொத்தம் 268 பேர் பலியாகி இருந்தனர். அதில் 5 பேர் அமெரிக்கர்.

Mohamed Naufar, Mohamed Anwar Mohamed Riskan, Ahamed Milhan Hayathu Mohamed ஆகியோரே மேற்படி சந்தேகநபர்கள். இவர்கள் மீது Los Angeles நகரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேற்படி மூவரும் மீதும் தாக்குதல்காரருக்கு பொருட்களை கொள்வனவு செய்தல், குண்டுகளை தயாரித்தல், தாக்குதலுக்கு தயார் செய்தல் போன்ற பல குற்றங்கள் சுமத்தப்பட்டு உள்ளன.

மேற்படி மூவரும் தற்போது இலங்கை அதிகாரிகளின் வசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும்படி அமெரிக்கா அழுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.