ரம்பின் அகதிகள் எதிர்ப்புள் இலங்கை அகதி

USHomeland

ரம்பின் அகதிகள் மீதான எதிர்ப்பு கொள்கையுள் இலங்கை தமிழ் அகதி ஒருவரும் அகப்பட்டுள்ளார். வியாகுமார் துரைசிங்கம் (Vijayakumar Thuraissigiam) என்ற இலங்கை அகதி அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள மெக்ஸிகோ மூலம் அமெரிக்காவுள் நுழைந்தவர்.
.
2017 ஆம் ஆண்டு அமெரிக்காவுள் Tijiuana நகர் பகுதியில் நுழைந்த இவரை அமெரிக்கா அதிகாரிகள் சுமார் 20 மீட்டர் தூரம் நுழைந்த பின்னரேயே கைது செய்தனர். அதாவது அவர் அமெரிக்காவின் உள்ளேயே கைது செய்யப்பட்டார், எல்லையில் அல்ல. அமெரிக்காவின் பழைய சட்டப்படி அமெரிக்காவுள், சட்டப்படியாக அல்லது சட்டவிரோதமான முறையில், நுழைந்த அனைவருக்கும் அமெரிக்க உயர்நீதிமன்றம் வரை தமது வழக்கை எடுத்துச்செல்ல உரிமை உண்டு.
.
ஆனால் ரம்ப் அந்த வகை உரிமையை பறித்து, சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை வழக்கு எதுவும் இன்றி உடனடியாக நாடுகடத்த முனைகிறார். அதற்கான உரிமையை அமெரிக்க நீதிமன்றில் பெற முனைந்து வருகிறார்.
.
நீதிமன்ற ரம்புக்கு அவரின் விருப்பப்படி சட்டத்தை மாற்றி வழங்கினால், வியாகுமார் போன்றோர் விரைவாக நாடு கடத்தப்படுவர்.
.
வியாகுமார் தரப்பில் தற்போது அமெரிக்காவின் பொதுநல சேவையான ACLU (American Civil Liberties Union) போராடி வருகிறது. இவருக்கான வழங்கு மேலும் சில மாதங்களில் இடம்பெறும். அதற்கு முன் நாடு கடத்தப்படாமல் இருந்தாலே அவருக்கு நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
.