ரம்பின் காங்கிரஸ் உரையை கிழித்தார் பிலோசி

Pelosi

அமெரிக்க அரசியல் முறைப்படி அந்நாட்டு சனாதிபதி  அமெரிக்காவின் நிலைப்பாடுகள் தொடர்பாக அவ்வப்போது காங்கிரஸுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் ஒரு அங்கமாக பதவியில் உள்ள சனாதிபதி வருட ஆரம்பத்தில் காங்கிரஸ் சென்று உரையாற்றுவது வளமை. அதை State of the Union என்பர். அவ்வாறு நேற்று செவ்வாய் Republican கட்சியை சார்ந்த ரம்ப் காங்கிரஸுக்கு சென்று ஆற்றிய உரையின் பிரதியை பேச்சின் முடிவில் கிழித்தார் Democratic கட்சியை சார்ந்த அவை பேச்சாளர் (House Speaker) நான்சி பிலோசி (Nancy Pelosi).
.
காங்கிரஸில் தனது உரையை ஆரம்பிக்க முன் ரம்ப் தனது உரையின் பிரதிகளை உபசனாதிபதி Mike Pence க்கும், அவை பேச்சாளர் நான்சி பிலோசிக்கும் வழங்கினார். அப்போது நான்சி பிலோசி சனாதிபதி ரம்புக்கு கைகுலுக்க தனது கையை வழங்கினார். ஆனால் ரம்ப் கைகுலுக்கு மறுத்து, தனது உரையை ஆரம்பித்திருந்தார்.
.
அண்மை காலங்களில் Republican கட்சியும், Democratic கட்சியும் ஒன்றுக்கு மற்றையது பரம விரோதிகளாக மாறியுள்ளன. அதற்கு ஏற்ப ஊடகங்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து உள்ளன. ரம்பின் ஆட்சியில் விரோதம் முற்றி வருகிறது.
.
அமெரிக்க அரசியல் படிப்படியாக மூன்றாம் உலக நாடுகளின் அரசியலுக்கு நிகரான நிலையை அடைந்து வருகிறது.
.