ரம்பின் சொத்துக்கள் $2.5 பில்லியனாக குறைந்தது

ரம்பின் சொத்துக்கள் $2.5 பில்லியனாக குறைந்தது

முன்னாள் அமெரிக்க சனாதிபதியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி $2.5 பில்லியனாக குறைந்துள்ளது என்கிறது Forbes magazine. அதனால் ரம்ப் Forbes 400 என்ற அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

சனாதிபதி ஆகுமுன், 2016ம் ஆண்டு ரம்பிடம் $3.7 பில்லியன் சொத்துக்கள் இருந்துள்ளன. 2017ம் ஆண்டு அத்தொகை $3.1 ஆக குறைந்து உள்ளது. வீழ்ச்சி 2021 வரை தொடர்ந்து உள்ளது. இவர் தனது சொத்துக்களை பெருமளவில் கட்டிடங்களில் மட்டும் கொண்டுள்ளதே வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

1​996ம் ஆண்டு முதல் கடந்த​ 25 ஆண்டுகளாக ​Forbes 400 பட்டியலில் ​இடம் கொண்டிருந்த ரம்ப் இந்த ஆண்டே அந்த பட்டியலில் இடம்பெற​வில்லை.​

Forbes 400 பட்டியலின்படி அமெரிக்காவின் முதல் செல்வந்தராக Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezo உள்ளார். இவரின் சொத்துக்களின் பெறுமதி $201 பில்லியன் என்று கூறப்படுகிறது. இதில் பெருமளவு பங்குச்சந்தை பங்குகளே.

இரண்டாவதாக Paypal, Tesla ஆகிய நிறுவனங்களை ஆரம்பித்த Elon Musk உள்ளார். இவரின் சொத்துக்களின் பெறுமதி $190.5 பில்லியன். இவரின் சொத்துக்களில் பெருமளவு Tesla பங்குச்சந்தை பங்குகளில் உள்ளது. மூன்றாவதாக Facebook நிறுவனத்தின் Mark Zuckerberg உள்ளார். இவரின் சொத்துக்கள் $134.5 பில்லியன்.