ரம்பின் WeChat தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

ரம்பின் WeChat தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது சீனாவுடனான பொருளாதார மோதலின் ஒரு அங்கமாக TikTok, WeChat ஆகிய smart phone app களை இன்று ஞாயிரு முதல் தடை செய்ய முனைந்தார். அதை எதிர்த்து அமெரிக்காவில் WeChat ஐ பயன்படுத்தும் மக்கள், பெருபாலும் அமெரிக்க சீனர், WeChat Users Alliance என்ற அமைப்பின் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

WeChat வழக்கை செவிமடுத்த San Francisco நகரில் உள்ள United States District Court நீதிபதி Laurel Beeler இறுதி நேரத்தில் ரம்பின் தடையை தற்காலிகமாக தடை செய்துள்ளார். அதனால் அமெரிக்கர் தொடர்ந்தும் WeChat app ஐ பயன்படுத்தலாம்.

Tencent என்ற சீன நிறுவனத்தின் உரிமை கொண்ட WeChat அமெரிக்க மக்களின் தரவுகளை களவாடுகின்றன என்பதே ரம்பின் வாதம். ஆனால் அந்த வாதத்தை ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்கிறது நீதிமன்றம். பதிலுக்கு ரம்பின் தடை அமெரிக்காவின் முதல் உரிமையான பேச்சு சுதந்திரத்தை (US First Amendment: freedom of speech) தடை செய்கிறது என்றுள்ளது நீதிமன்றம்.

சுமார் 3.3 மில்லியன் அமெரிக்கர் WeChat மூலம் தமது உறவுகளுடன் தொடர்புகொள்கின்றனர். குறிப்பாக சீனர் தமது சீனாவில் உள்ள உறவுகளுடன் WeChat மூலமே தொடர்புகொள்கின்றனர். அத்துடன் WeChat மூலம் சிறுதொகை பணமாற்றும் செய்கின்றனர்.

சீனாவின் WeChat அமெரிக்காவின் WhatsApp க்கு நிகரானது.

TikTok app உம் ரம்பின் தடையில் இருந்து தப்பி உள்ளது. புதிய தீர்வின்படி அமெரிக்காவில் TikTok கிளையை மட்டும் அமெரிக்காவின் Oracle-Walmart குழு கையாளும். ஆனால் அந்த குழு அமெரிக்க கிளையின் 20% உரிமையை மட்டுமே கொண்டிருக்கும். மிகுதி 80% உரிமை தொடர்ந்தும் சீனாவின் ByrDance கையிலேயே இருக்கும்.