ரம்புக்கு இராணுவ ஆட்சி செய்ய ஆலோசனை?

ரம்புக்கு இராணுவ ஆட்சி செய்ய ஆலோசனை?

நவம்பர் 4ம் திகதி இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் பைடென் வென்று, ரம்ப் தோல்வி அடைந்து இருந்தாலும் ரம்ப் தற்போதும் தானே வென்றதாக கூறிவருகிறார். அதற்கு ஏற்ப நேற்று வெள்ளிக்கிழமை ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் Michael Flynn ரம்ப் இராணுவ ஆட்சியை (invoke martial law) ஏற்படுத்தலாம் என்று கூறியதாக New York Times, CNN ஆகிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ரம்பின் அனைத்து உதவியாளர்களும் பைடென் வென்றதை ஏற்றுக்கொள்ளுமாறு கூற, Flynn னும், அவரின் சட்டத்தரணி Sidney Powell என்பவரும் ரம்பை தொடர்ந்தும் பதவியில் இருக்க வழிதேடுமாறு கூறுகின்றனர். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (2020/12/18) வெள்ளைமாளிகையில் பெரும் வாக்குவாதங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறை தண்டனை ஒன்றை அனுபவித்து வந்த முன்னாள் ஜெனரல் Flynn அண்மையிலேயே ரம்பால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டு இருந்தார்.

Sidney Powell என்ற சட்டத்தரணி அமெரிக்காவில் இடம்பெற்ற சனாதிபதி தேர்தல் ஊழல் நிறைந்தது என்று கூறிவருகிறார். அந்த ஊழலுக்கு வெனிசுவேலா உதவியதாகவும் கூறி வருகிறார். ஆனால் அவர் எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை. இவ்வகை கருத்துக்களை கொண்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு உள்ளன.