ரம்ப் தரப்பு கேட்க, Abe நோபல் பரிசுக்கு பரிந்துரை

Trump

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யுமாறு ரம்ப் தரப்பே ஜப்பானிய பிரதமர் அபேயை (Abe) கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
.
அதற்கு அமையயவே ஜப்பானிய பிரதமர் அபே ரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்குமாறு நோபல் அமைப்பை 5-பக்க கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். அத்துடன் ரம்பும் அபே நோபல் அமைப்புக்கு வழங்கிய பரிந்துரை கடிதத்தின் பிரதி ஒன்றை தனக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளார். அதை ரம்ப் “the most beautiful copy” என்று விபரித்து உள்ளார்.
.
ஜப்பானிய பிரதமர் அபே அமெரிக்க ஜனாதிபதி ரம்பிடம் இருந்து பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை பெறும் நோக்கிலேயே இவ்வாறு செய்துள்ளார் என்று கருதப்படுகிறது.
.
ஜப்பானின் எதிர்க்கட்சி உறுப்பினரான Junya Ogawa அபேயின் இந்த செயல் ஜப்பானுக்கு அவமானம் தரும் செயல் என்று கூறியுள்ளார்.
.
நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தோர் பெயர்களையும், பரிந்துரை செய்யப்பட்டோர் பெயர்களையும் வெளியிடா கொள்கை ஒன்றை நோபல் அமைப்பு கடைபிடித்து வருகிறது. ஆனால் ரம்ப், அபே செயல்கள் அதற்கும் முரணாக உள்ளது.
.