ரம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

ரம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

கரோனா தொற்றிய அமெரிக்க சனாதிபதி ரம்ப் சற்று முன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். இவர் இன்று வெள்ளி மாலை 6:16 மணிக்கு வெள்ளைமாளிகையில் இருந்து இராணுவ ஹெலி மூலம் அருகில் உள்ள Walter Reed என்ற வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

சனாதிபதி சுயமான நடந்தே ஹெலியை அடைந்து இருந்தார். ஹெலிவரை நடந்து செல்ல இவருக்கு உதவிகள் எதுவும் தேவைப்பட்டு இருக்கவில்லை.

ஹெலிக்கு செல்ல முன் ரம்ப் ஒரு சிறிய வீடியோவையும் பதிவு செய்திருந்தார். அதில் தான் வைத்தியசாலைக்கு செல்வதை கூறி, தன் நலத்துக்கு வேண்டியோருக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ ரம்ப் வெளியேறி சில நிமிடங்களின் பின் வெளியிடப்பட்டு இருந்தது.

கரோனா தொற்றிய சனாதிபதியின் மனைவி தற்போதும் வெள்ளைமாளிகையிலேயே உள்ளார்.

எதிராணியான Democratic கட்சி சனாதிபதி தேர்தல் தொடர்பான ரம்ப் எதிர்ப்பு விளம்பரங்களை (attack ad) இடைநிறுத்தி உள்ளது.