ரஷ்யாவின் கரோனா மருந்து 91.6% வெற்றிகரமானது

ரஷ்யாவின் கரோனா மருந்து 91.6% வெற்றிகரமானது

ரஷ்யாவின் Sputnik V என்ற கரோனா தடுப்பு மருந்து 91.6% வெற்றிகரமானது என்று கூறியுள்ளது பிரித்தானியாவை தளமாக கொண்ட The Lancet என்ற மருத்துவ ஆய்வு வெளியீடு. அதனால் இதுவரை ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சந்தேகம் கொண்டிருந்த மேற்கு தற்போது Sputnik V யின் தரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த மேற்படி ஆய்வு Sputnik V மீதிருந்த சந்தேகத்தை விலக்கி உள்ளது என்று Ian Jones என்ற University of Reading ஆய்வாளர் கூறியுள்ளார். மேற்படி ஆய்வு 20,000 பேருக்கு வழங்கிய Sputnik V மருந்தின் தரவுகளை உள்ளடக்கியது.

Sputnik V தடுப்பு மருந்தும் இரண்டு ஊசிகளை கொண்டது. இரண்டாவது ஊசி முதலாம் ஊசியின் பின் 21 நாட்களில் ஏற்றப்படல் வேண்டும். இதன் விலை சுமார் $10 மட்டுமே.

மேற்கின் சந்தேகத்தின் மத்தியில் ஏற்கனவே ரஷ்யா தனது மக்களுக்கு Sputnik V யை செலுத்தி வந்துள்ளது. அதேவேளை 40,000 பேரை உள்ளடக்கிய 3ம் கட்ட பரிசோதனையையும் ரஷ்யா செய்து வருகிறது. Belarus, Venezuela, Bolivia, Algeria ஆகிய நாடுகளும் Sputnik V பரிசோதனையில் பங்கு கொண்டுள்ளன.

Pfizer, Oxford/AstraZeneca, Moderna ஆகிய நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகளுடன் தற்போது Sputnik V யும் இணைந்துள்ளது.