ரஷ்ய உல்லாச பயணிகள் வரவு திடீரென இடைநிறுத்தம்

ரஷ்ய உல்லாச பயணிகள் வரவு திடீரென இடைநிறுத்தம்

இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் முதல் Aeroflot விமான சேவையின் உல்லாச  பயணிகள் விமானம் ஒன்று ரஷ்யாவில் இருந்து கொழும்பு வர இருந்தது. டிசம்பர் 27ம் திகதி கொழும்பில் தரையிறங்கவிருந்த இந்த சேவை திடீரெனெ இடைநிறுத்தப்பட்டு உள்ளது. அந்த சேவை குறைந்தது டிசம்பர் 31ம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

இரண்டாவது உல்லாச பயணிகள் விமானம் ஒன்று யுகிரைனில் (Ukraine) இருந்து டிசம்பர் 28ம் திகதி வரவுள்ளது. அதன் வரவு தற்போதும் திட்டப்படியே உள்ளது.

இலங்கை வரும் உல்லாச பயணிகள் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் அவசியம். இலங்கை விமான நிலைய விதிமுறைகளை கையாளும் பணி இலங்கையின் Civil Aviation Authority (CAA),  Airport and Aviation Services (Sri Lanka) Ltd. (AASL)ஆகிய இரண்டின் கைகளிலும் உள்ளன.

அதேவேளை வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் பலர் தொடர்ந்தும் இலங்கைக்கு எடுத்துவரப்படுகின்றனர்.