மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய எரிபொருள்களை இந்தியாவுக்கு காவிவரும் கப்பல்களுக்கு மேற்கின் ரஷ்யா மீதான தடைகள் காரணமாக உருவாகும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
Lloyd’s Register என்ற வர்த்தக கப்பல் பதிவு அமைப்பு இந்தியாவின் Gatik Ship Management என்ற கப்பல் நிறுவனத்தின் 21 கப்பல்களின் சான்றிதழ்களை ஜூன் 3மாதம் ம் திகதியுடன் இரத்து செய்கிறது. அதனால் இந்த கப்பல்கள் காப்புறுதி செய்ய பல சிரமங்களை எதிர்கொள்ளும்.
அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் தண்டனைகளில் அகப்படாது இருக்கும் நோக்கிலேயே Lloyd’s Register இந்த நகர்வை செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை $60 க்கும் அதிக விலை வழங்கி பெற்றால் அந்த கொளவனவு, அதை காவும் கப்பல் ஆகியன தண்டனைக்கு உள்ளாகும்.
இந்திய Gatik ஏற்கனவே தனது வேறு 36 கப்பல்களுக்கு பதிவுகளை இழந்து இருந்தது.
Indian Register of Shipping என்ற இந்திய அமைப்பு இருந்தாலும் இதன் சான்றிதழை கொண்ட கப்பல்கள் காப்புறுதி செய்வது கடினம்.
சீனா ரஷ்யாவின் மலிவு விலை எரிபொருளை தரை குழாய் மூலம் இலகுவில் பெறுகிறது. ஆனால் பாகிஸ்தான் ஊடு அல்லது சீனா ஊடு தரை மூலம் எடுப்பது சாத்தியம் இல்லை.