ரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம்

ரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம்

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற Valdai Discussion Club என்ற அமர்வின்போதே ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் மேற்படி கருத்தை தெரிவித்து உள்ளார். சீனாவும் மறைமுகமாக பூட்டினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

மேற்படி அமர்வின்போது விடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பூட்டின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்துள்ள நம்பிக்கையும், கூட்டுறவும் மேலதிக உடன்படிக்கை ஒன்றுக்கு அவசியத்தை ஏற்றப்படுத்தாவிடினும், தாம் ரஷ்ய-சீன இராணுவ அணிக்கு ஆர்வம் கொண்டுள்ளதாக கூறி உள்ளார்.
தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ கூட்டுக்கு பேச்சுக்கள் இடம்பெறவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அவ்வாறான கூட்டுக்கு பேச்சுக்கள் இடம்பெறாது என்று சொல்வதற்கில்லை என்றும் பூட்டின் கூறியுள்ளார்.

ஸ்டாலின், மாஓ காலத்தில் இவ்வாறு ஒரு இராணுவ கூட்டுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு ஆனால் நிறைவு பெறாமல் முடிந்திருந்தது. மீண்டும் தற்போதுதே அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது. அப்போது USSR பலமாக இருந்திருந்தாலும், தற்போது சீனாவே பலமாக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் சீனா மிக பலமாக உள்ளது.

அண்மைக்காலங்களில் அமெரிக்காவின் தலைமையில் உள்ள மேற்கு நாடுகள் மீண்டும் ரஷ்யா, சீனா இரண்டின் மீதும் எதிர்ப்பு பார்வையை கொள்ள ஆரம்பித்து உள்ளன. இதுவரை கிழக்கில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து உள்ளது. இதுவரை அமெரிக்காவுடன் இருந்த பாகிஸ்தான் சீனா பக்கம் சாய்ந்து உள்ளது.